விடுதலைப்புலிகளுடனான சண்டையின்போது போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை - இலங்கை புதிய ராணுவ தளபதி


விடுதலைப்புலிகளுடனான சண்டையின்போது போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை - இலங்கை புதிய ராணுவ தளபதி
x
தினத்தந்தி 26 Aug 2019 7:27 PM GMT (Updated: 26 Aug 2019 7:27 PM GMT)

விடுதலைப்புலிகளுடனான சண்டையின்போது போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என இலங்கையின் புதிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக சாவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கு அமெரிக்காவும், தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு தூதரகங்களும் கவலை தெரிவித்துள்ளன.

ஏனென்றால், விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட சண்டையின்போது, சில்வா, போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானத்திலேயே கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை சில்வா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

நான் போர்க்குற்றம் எதிலும் ஈடுபடவில்லை. போராளிகள் பிடியில் இருந்து தமிழ் மக்களை விடுவிக்க மனிதாபிமான நடவடிக்கையே எடுத்தோம். தமிழர்களும் எங்கள் மக்கள், அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை என்பதால், அதை செய்தோம். நாங்கள் எப்படி பாதுகாத்தோம் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். அதற்காக எங்களுக்கு பாராட்டும் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story