உலக செய்திகள்

சீனாவிடம் இருந்து ஹாங்காங்கை விடுவிக்க இங்கிலாந்தின் ஆதரவை கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் + "||" + Democratic activists struggle for UK support to liberate Hong Kong from China

சீனாவிடம் இருந்து ஹாங்காங்கை விடுவிக்க இங்கிலாந்தின் ஆதரவை கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம்

சீனாவிடம் இருந்து ஹாங்காங்கை விடுவிக்க இங்கிலாந்தின் ஆதரவை கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம்
சீனாவிடம் இருந்து ஹாங்காங்கை விடுவிக்க இங்கிலாந்தின் ஆதரவை கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
ஹாங்காங்,

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் ‘ஒரு நாடு இரண்டு நிர்வாகம்’ என்கிற கொள்கையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்து வருகிறது.


இந்த சூழலில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்போது சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரும் போராட்டமாக உருவெடுத்து உள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து ஹாங்காங்கை விடுவிக்கக்கோரி ஜனநாயக ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வுகாண சர்வதேச நாடுகளின் ஆதரவை ஹாங்காங் போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். அந்த வகையில் ஹாங்காங்கை சீனாவிடம் இருந்து மீட்க இங்கிலாந்து உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹாங்காங்கில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு நேற்று நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இங்கிலாந்தின் தேசியக்கொடிகளை கைகளில் ஏந்தி போராடிய அவர்கள், “கடவுள் இங்கிலாந்து ராணியை காப்பாற்றுவார், இங்கிலாந்து, ஹாங்காங்கை காப்பாற்ற வேண்டும்” “ஒரு நாடு இரண்டு நிர்வாகம் என்கிற திட்டம் காலாவதியாகிவிட்டது” போன்ற கோஷங்களை முழங்கினர்.

அத்துடன், “1997-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஹாங்காங்குக்கு உரிய தன்னாட்சி அதிகாரத்தை சீனா வழங்கியிருக்கிறதா என்பதை இங்கிலாந்து உறுதி செய்ய வேண்டும்” எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்துள்ளது.
2. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி திரும்பிய 32 பேர் தொடர்ந்து கண்காணிப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி திரும்பிய 32 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
3. காதலர் தின உற்சாக கொண்டாட்டம் ஆதரவு, எதிர்ப்பு போராட்டங்களால் பரபரப்பு
புதுச்சேரியில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதை ஆதரித்தும் எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் மேலும் 116 பேர் பலி
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1,483 ஆக அதிகரித்துள்ளது.
5. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : டிரம்ப்- ஜி ஜின்பிங் ஆலோசனை
கொரோனோ வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், இவ்விவகாரம் குறித்து டிரம்புடன் ஜி ஜின்பிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.