ஐநா கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு


ஐநா கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
x
தினத்தந்தி 24 Sep 2019 2:51 AM GMT (Updated: 24 Sep 2019 2:51 AM GMT)

ஐநா கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

நியூயார்க், 

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். 7 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி,  ஐநா கூட்டத்துக்கு இடையே  பல்வேறு நாடுகளுடன் தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மார்கல், இத்தாலி ஜனாதிபதி கியுசேப் கோண்ட், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது சோலி, பூடான் பிரதமர் லோதே ஷெரிங், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே ஆகிய தலைவர்களையும் சந்தித்து பேசினார். 

கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத்தை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. யோகாவை சர்வதேச அளவில் பிரபலமாக்க மோடி எடுத்த முயற்சிகளையும் தமீம் பின் ஹமாத் பாராட்டினார். மாலத்தீவு அதிபருடனான சந்திப்பின் போது,  வளர்ச்சி ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பருவநிலை மாற்ற ஒத்துழைப்பு ஆகிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். 

அதேபோல், யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்ரீயட்டா போரே வையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்ப்பின் போது, இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளையும் மோடி சுட்டிக்காட்டினார். 


Next Story