காஷ்மீர் விவகாரம்: பத்திரிகையாளர் கேள்விக்கு இம்ரான்கானை கிண்டல் செய்த டொனால்ட் டிரம்ப்


காஷ்மீர் விவகாரம்: பத்திரிகையாளர் கேள்விக்கு இம்ரான்கானை கிண்டல் செய்த டொனால்ட் டிரம்ப்
x
தினத்தந்தி 24 Sep 2019 6:29 AM GMT (Updated: 24 Sep 2019 6:29 AM GMT)

காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தான் பத்திரிகையாளரின் கோபத்திற்குப் 'இது போன்ற நிருபர்களை நீங்கள் எங்கே கண்டு பிடித்தீர்கள்?'என்று டொனால்ட் டிரம்ப் இம்ரான்கானை கேலி செய்தார்.

நியூயார்க்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும்  கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.  அப்போது  காஷ்மீர் விவகாரத்தில் கோபத்துடன் பாகிஸ்தானின் பத்திரிகையாளர் ஒருவர்  டிரம்பிடம் கேள்வி கேட்டார். உடனே டிரம்ப் உங்கள்  கேள்வி ஒரு அறிக்கையைப் போலவே தெரிகிறது என்றார்.

பாகிஸ்தான் பிரதமரை சங்கடப்படுத்தும் விதமாக பாகிஸ்தான்  பத்திரிகையாளரை கேலி செய்த டொனால்ட் டிரம்ப், இம்ரான்கானை நோக்கி , "இது போன்ற செய்தியாளர்களை நீங்கள் எங்கே கண்டுபிடித்தீர்கள்?"  "நீங்கள் அவருடைய (இம்ரான்) அணியைச் சேர்ந்தவரா? நீங்கள் ஒரு அறிக்கையை வெளியிடுகிறீர்கள், கேள்வி கேட்கவில்லை என நிருபரிடம் டொனால்டு டிரம்ப் கூறினார்.

அதிபர் டிரம்பால் கேலி செய்யப்பட்ட பின்னர், பத்திரிகையாளர், "நான் அவரது (இம்ரானின்) அணியில்  உறுப்பினராக இல்லை, ஆனால் ஒரு சுயாதீன  பத்திரிகையாளராக இருக்கிறேன், நான் எனது கேள்வியை முடிக்கிறேன்..." என கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் சிறிது நேரம் கழித்து, பாகிஸ்தான்  பத்திரிகையாளர் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்க முயன்றார், டொனால்ட் டிரம்ப், மீண்டும் ஒரு மிகச் சிறிய, ஒரு வினாடி அறிக்கையா என கேட்டார்.

நிருபர் முன்னோக்கி சென்று காஷ்மீரில் பாகிஸ்தானின் தவறான நிகழ்ச்சிகளை பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

இதற்கு டிரெம்ப் "இது போன்ற நிருபர்களை நீங்கள் எங்கே கண்டுபிடித்தீர்கள் என கேட்டார். இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்திப்பை நேரடியாக ஒளிபரப்பிய ஒரு பாகிஸ்தான் சேனல் உடனடியாக ஒளிபரப்பை நிறுத்தியது.

டொனால்ட் டிரம்ப் காஷ்மீரில் மத்தியஸ்தம் செய்ய இன்னும் தயாராக இருக்கிறாரா என்ற கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.

 இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால் மட்டுமே காஷ்மீர்  பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, எனக்கு  பிரதமர் மோடியுடன் நல்ல உறவு இருக்கிறது. பிரதமர் கானுடன் எனக்கு நல்ல உறவு உள்ளது, எந்த நேரத்திலும் அவர்கள் சொன்னால், நான் ஒரு நல்ல நடுவராக இருப்பேன் என்று நினைக்கிறேன். நான் ஒரு நடுவராக ஒருபோதும் தோல்வியடையவில்லை என கூறினார்.

Next Story