பாகிஸ்தான் தன் மண்ணில் பயங்கரவாத இயக்கங்களை கணிசமாக கட்டுப்படுத்த தவறி விட்டது- அமெரிக்கா குற்றச்சாட்டு


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
x
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
தினத்தந்தி 2 Nov 2019 5:10 AM GMT (Updated: 2 Nov 2019 5:10 AM GMT)

பயங்கரவாத நிதியைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காகவும், பயங்கரவாதிகளுக்கு அதன் மண்ணில் பயிற்சி அளிப்பதற்காகவும் பாகிஸ்தானை அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்து உள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்காவின் அறிக்கைகள் 2018  கூறி உள்ளதாவது:-

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா (எல்.ஈ.டி), ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி செல்வதை கட்டுப்படுத்த தவறி உள்ளது.

அதன் மண்ணில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதை தடுக்க பாகிஸ்தான் தவறிவிட்டது.

பயங்கரவாத முன்னணி அமைப்பை  சேர்ந்தவர்களை  2018 பொதுத் தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் அனுமதித்து உள்ளது.

பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத குழுக்கள் நாட்டிற்கு வெளியே உள்ள இலக்குகளை மையமாகக் கொண்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story