மலேசியாவில் சுமத்ரான் காண்டாமிருக இனம் முற்றிலும் அழிந்தது


மலேசியாவில் சுமத்ரான் காண்டாமிருக இனம் முற்றிலும் அழிந்தது
x
தினத்தந்தி 24 Nov 2019 10:32 PM GMT (Updated: 24 Nov 2019 10:32 PM GMT)

மலேசியாவில் சுமத்ரான் காண்டாமிருக இனம் முற்றிலும் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்,

சுமத்ரான் இன காண்டாமிருகம் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாகும். ஒரு காலத்தில் ஆசியா கண்டம் முழுவதும் பரந்து காணப்பட்ட சுமத்ரான் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை தற்போது வெறும் 100 ஆக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மலேசியா நாட்டில் சுமத்ரான் இனத்தில் கடைசியாக எஞ்சியிருந்த, இமான் என்ற ஒரே ஒரு பெண் காண்டாமிருகம் புற்றுநோய் காரணமாக நேற்று முன்தினம் மாலை செத்துவிட்டது. இதன் மூலம், சுமத்ரான் காண்டாமிருக இனம் தங்களது நாட்டில் முற்றிலும் அழிந்துவிட்டதாக மலேசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மலேசியாவின் சுற்றுலா மற்றும் கலாசார துறை மந்திரி கிறிஸ்டின் லீவ் கூறுகையில், “கடந்த 2014-ம் ஆண்டு எங்களது வசம் வந்ததில் இருந்து நாங்கள் இமானை மிகச் சிறந்த முறையில் பராமரித்து வந்தோம் கடந்த சில ஆண்டுகளில் அதிக ரத்த இழப்பு காரணமாக ஏற்பட்ட சிக்கலான தருணங்களில் இருந்து, மீண்டு இமான் பல முறை மரணத்தில் இருந்து தப்பியது” என கூறினார்.

மலேசியாவின் கடைசி ஆண் சுமத்ரான் காண்டாமிருகம் கடந்த மே மாதத்தில் செத்தது நினைவுகூரத்தக்கது.

Next Story