பாகிஸ்தானில் பஸ் மீது வேன் மோதி தீப்பிடித்ததில் 15 பேர் பலி


பாகிஸ்தானில் பஸ் மீது வேன் மோதி தீப்பிடித்ததில் 15 பேர் பலி
x
தினத்தந்தி 13 Dec 2019 6:30 PM GMT (Updated: 13 Dec 2019 6:29 PM GMT)

பாகிஸ்தானில் பஸ் மீது வேன் மோதி தீப்பிடித்த விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகினர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் தோர காசி கான் மாவட்டத்தில் இருந்து பலூசிஸ்தானின் குவெட்டா நகருக்கு பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.

இந்த பஸ் பலூசிஸ்தானில் உள்ள கான் மெப்தார்சாய் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்திசையில் வந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியது. இதில் 2 வாகனங்களிலும் தீப்பிடித்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைவதற்குள் 2 வாகனங்களும் முற்றிலும் எரிந்தன. இந்த கோரவிபத்தில் 15 பேர் உடல் கருகி பலியாகினர்.

மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய வேனில் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தி வரப்பட்டதும், அதனாலேயே 2 வாகனங்களிலும் தீப்பிடித்தும் தெரியவந்துள்ளது.


Next Story