ஆப்பிரிக்க நாடான காங்கோவின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் - 7 பெண்கள் உள்பட 22 பேர் பலி


ஆப்பிரிக்க நாடான காங்கோவின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் - 7 பெண்கள் உள்பட 22 பேர் பலி
x
தினத்தந்தி 16 Dec 2019 10:17 PM GMT (Updated: 16 Dec 2019 10:17 PM GMT)

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 7 பெண்கள் உள்பட அப்பாவி மக்கள் 22 பேர் பலியாகினர்.


* சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

* ஆப்பிரிக்க நாடான காங்கோவின் நோர்ட் கிவு மாகாணம் பெனி நகரில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 7 பெண்கள் உள்பட அப்பாவி மக்கள் 22 பேர் பலியாகினர்.

* ஜிம்பாப்வே நாட்டின் துணை அதிபர் காஸ்டான்டினோ சிவேங்காவின் மனைவி மேரி முபைவா மீது லஞ்சம் மற்றும் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அந்த நாட்டின் ஊழல் தடுப்பு போலீசார் மேரி முபைவாவை நேற்று கைது செய்தனர்.

* ஈராக்கின் தியாலா மாகாணம் அல் மக்டாதியா நகரில் உள்ள ராணுவ தளம் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவவீரர்கள் 6 பேர் பலியாகினர். மேலும் 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

Next Story