சிரியா தலைநகரில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி


சிரியா தலைநகரில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி
x
தினத்தந்தி 17 Dec 2019 6:14 AM GMT (Updated: 17 Dec 2019 6:14 AM GMT)

சிரியாவின் தலைநகரத்தில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் பலியானார்.

டமாஸ்கஸ்,

சிரியா நாட்டின் தலைநகரமான டமாஸ்கஸ் நகரத்தில் உள்ள நாஹர் ஆய்ஷா பகுதியில் இன்று அதிகாலை காரில் பொருத்தப்பட்டிருந்த குண்டுவெடித்து சிதறியது.

குண்டுவெடிப்பின் போது அந்த காரின் உள்ளே இருந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். பயங்கரவாதிகள் சிலர் சக்தி வாய்ந்த வெடிகுண்டை காரில் பொருத்தியிருக்கலாம் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story