உலக செய்திகள்

கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 பேர் பலி + "||" + Terrorists attack police camp in Karisha area, Kenya - 3 killed

கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 பேர் பலி

கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 பேர் பலி
கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது அல்-சபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

* நைஜர் நாட்டில் கடந்த 9-ந் தேதி ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்தது. பதில் தாக்குதலில் 77 பயங்கரவாதிகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அந்த நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ராணுவ வீரர்கள் இறப்பையொட்டி அங்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

* பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக அங்குள்ள கில்லி லுக்மன் பகுதியில் நடந்த நிச்சயதார்த்த விழாவின்போது, கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். இதுபோக அந்த மாகாணத்தில் 8 பேர் குளிர் மற்றும் மழையால் உயிரிழந்தனர்.

* கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது அல்-சபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் பலியானதாகவும், பெண் செவிலியர் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே மாதத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கபட்ட 12 வயது சிறுமி
12 வயது சிறுமியை ஒரேமாதத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இது குறித்து அறிந்த அதிகாரிகள் சிறுமியை மீட்டுள்ளனர்
2. கென்யாவில் வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலி
கென்யாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...