உலக செய்திகள்

பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் : டொனால்டு டிரம்புக்கு முற்றும் நெருக்கடி + "||" + U.S. House votes to send Trump impeachment to Senate for trial

பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் : டொனால்டு டிரம்புக்கு முற்றும் நெருக்கடி

பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் : டொனால்டு டிரம்புக்கு முற்றும் நெருக்கடி
டிரம்பை, ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் செனட்டுக்கு அனுப்பப்பட்டது. டொனால்டு டிரம்புக்கு நெருக்கடி முற்றுகிறது.
வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம், செனட் அவைக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அவருக்கு எதிரான விசாரணை வருகிற 21ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியின் போட்டியாளரான ஜோ பிடனை விசாரிக்க உக்ரைன் மீது அவர் அழுத்தம் கொடுத்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, டிரம்பை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்த ஜனநாயக கட்சி, அமெரிக்க நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் அவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளை செனட்டுக்கு அனுப்பவும், அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது குற்றச்சாட்டு விசாரணைக்கு எடுக்கவும் வாக்கெடுப்பு இந்திய நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. இதில் தீர்மானத்தை செனட் அவைக்கு அனுப்ப மக்கள் பிரதிநிதிகள் அவை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான தீர்மானத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோச்சி கையெழுத்திட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. கை கொடுக்காமல் அவமானப்படுத்திய டிரம்ப்... உரையின் நகலை கிழித்தெறிந்த நான்சி
அமெரிக்கா பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, டிரம்ப் உரையின் நகலை கிழித்த சம்பவம் சரச்சையை கிளப்பியுள்ளது.
2. வங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.85 லட்சம்: ஜாலியாக செலவு செய்த தம்பதி
வங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்ச ரூபாயை செலவு செய்ததால் தம்பதி, வழக்கை சந்தித்து வருகின்றனர்.
3. விமான நிலையத்தில் நீண்ட காலமாக திருடி வந்த டிரம்ப்பின் முன்னாள் பார்ட்னர்
விமான நிலையத்தில் நீண்ட காலமாக திருடி வந்த டிரம்ப்பின் முன்னாள் பார்ட்னர் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நட்சத்திர ஓட்டல்களின் தலைமை நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.