உலக செய்திகள்

பிரதமர் மோடி- டொனால் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்த பிரபல கோடீசுவரர் + "||" + At Davos, Billionaire George Soros' Big Attack On PM Modi

பிரதமர் மோடி- டொனால் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்த பிரபல கோடீசுவரர்

பிரதமர் மோடி- டொனால் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்த  பிரபல கோடீசுவரர்
டாவோஸ் மாநாட்டில் பிரபல கோடீசுவரர் பிரதமர் மோடி- டொனால் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து பேசினார்.
டாவோஸ்

பிரபல கோடீசுவரர் ஜார்ஜ் சொரெஸ் சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பேசினார். அப்போது அவர்  உலக, அரசியல் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து பேசினார்.

அவர் பேசும் போது இந்தியாவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி ஒரு இந்து தேசியவாத அரசை உருவாக்க முயற்சிக்கிறார். தன்னாட்சி முஸ்லிம் பிராந்தியமான காஷ்மீர் மீது தண்டனை நடவடிக்கைகளை எடுத்து உள்ளார். கோடிகணக்கான முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க  அச்சுறுத்துகிறார் என்று கூறினார். 

இதுபோல் அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப்பையும்  குற்றம் சுமத்தி பேசினார். 

ஜனாதிபதி டிரம்ப்  உலகம் தன்னைச் சுற்ற வேண்டும் என்று விரும்பும் இறுதி நாசீசவாதி.  ஜனாதிபதியாகும் அவரது கற்பனை உண்மையாகிவிட்டபோது, அவரது நாசீசம்  ஒரு நோயியல் பரிமாணத்தை உருவாக்கியது. உண்மையில், அவர் அரசியலமைப்பினால் ஜனாதிபதி பதவிக்கு விதிக்கப்பட்ட வரம்புகளை மீறியுள்ளார், அதற்காக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என  கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
2. பிரதமர் மோடி கடுமையானவர் ; அமெரிக்க அதிபர் டிரம்ப்
வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக, டிரம்ப், சமீப காலங்களில் 2-வது முறையாக கூறியுள்ளார்.
3. இந்தியாவின் பாதுகாப்பிற்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம்-டொனால்டு டிரம்ப்
இந்தியாவின் பாதுகாப்பிற்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம் என நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப் கூறினார்.
4. அன்று டீ விற்றவர், இன்று நாட்டின் பிரதமர் - மோடிக்கு டொனால்டு டிரம்ப் புகழாரம்
அன்று டீ விற்றவர், இன்று நாட்டின் பிரதமர் என நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப் மோடியை புகழ்ந்தார்.
5. இரு நாட்டு உறவுகளை நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் - பிரதமர் மோடி
சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடக்கும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி இரு நாட்டு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் பிரதமர் மோடி கூறினார்.