தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பாறை மீது பஸ் மோதி விபத்து: 9 பேர் பலி


தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பாறை மீது பஸ் மோதி விபத்து: 9 பேர் பலி
x

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பாறை ஒன்றின் மீது பஸ் மோதிய கோர விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.


* ஈராக்கில் வேலையில்லா திண்டாட்டம், அடிப்படை வசதிகள் இன்மை ஆகிய பிரச்சினைகளில் அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக போராட்டங்கள் நடந்து வந்தன. இதில் போராட்டக்காரர்கள் அங்குள்ள பாலங்கள், சாலைகள், சதுக்கங்களில் தடைகளை ஏற்படுத்தி இருந்தனர். அவற்றை ஈராக் பாதுகாப்பு படைகள் நேற்று அகற்றின.

* தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் அமைந்துள்ள பாறை மீது பஸ் மோதி விபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில் 9 பேர் பலியாகினர்.

* உள்நாட்டுப்போர் நடந்து வரும் சிரியாவில், இத்லிப் மாகாணத்தில் 3 கிராமங்களை கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்து அதிபர் ஆதரவு படைகள் விடுவித்து உள்ளன.

* பிரேசில் நாட்டில் பெலோ ஹார்சாண்டி மாநகர பகுதியில் பலத்த மழை பெய்தது. 24 மணி நேரத்தில் அங்கு 171.8 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 110 ஆண்டு கால வரலாற்றில் இதுதான் அதிக அளவு என தகவல்கள் கூறுகின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

* போலந்து நாட்டில் அரசுக்கு எதிராக தீர்ப்பு அளிக்கிற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்வதற்கு வழிவகை செய்து சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி விடும் என்று ‘பிரிடம் ஹவுஸ்’ என்னும் மனித உரிமை அமைப்பு கருத்து தெரிவித்துள்ளளது.

* ஜெருசலேம் புறநகரில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 20 பாலஸ்தீனர்கள் படுகாயம் அடைந்தனர்.


Next Story