ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது


ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது
x
தினத்தந்தி 28 Jan 2020 10:10 PM GMT (Updated: 28 Jan 2020 10:10 PM GMT)

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது என்று தகவல் வெளியாகி உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில் உள்ள டே யாக் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இது பயணிகள் விமானம் என்றும், அதில் பயணம் செய்த 83 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் விபத்துக்குள்ளான அந்த விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. இதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி மாகாணத்தில் தலீபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டே யாக் மாவட்டத்தில் இ-11ஏ ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் தீ பிடித்தற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விமானம் எதிரிகளால் வீழ்த்தப்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் தெரிந்ததும் தெரியப்படுத்துவோம்” என்றார்.

எனினும் விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள், அவர்களின் கதி என்ன என்பது குறித்து தெரிவிக்கவில்லை.


Next Story