வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்


வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
x
தினத்தந்தி 18 March 2020 8:30 PM GMT (Updated: 18 March 2020 7:45 PM GMT)

வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

மாஸ்கோ,

பசிபிக் பெருங்கடல் தீவு நாடு வனுவாட்டு. வனுவாட்டுவில் சோலா என்ற கிராமத்தில் இருந்து 97 கி.மீ. வடகிழக்கை மையமாக கொண்டு நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நில நடுக்கமானது, 178.8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக உயிரிழப்போ, வேறு சேதங்களோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

Next Story