சவூதி அரேபியாவில் விமான, ரெயில் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த முடிவு


சவூதி  அரேபியாவில் விமான, ரெயில் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த முடிவு
x
தினத்தந்தி 20 March 2020 5:15 AM GMT (Updated: 20 March 2020 7:18 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சவூதி அரேபியாவில் 14 நாட்களுக்கு விமானம்,ரெயில் போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரியாத்,

சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாகக் கொண்ட கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.சவூதி அரேபியாவிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தீவிரமாக  உள்ளது. 

சவூதி அரேபியாவில்  தற்போது வரை 274 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் அங்கு இதுவரை உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சவுதி அரேபியாவில் வரும் சனிக்கிழமை முதல் 14 நாட்களுக்கு உள்ளூர் விமானங்கள், ரெயில்கள், பேருந்து, டாக்ஸி சேவைகளை நிறுத்த அந்நாட்டு உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Next Story