ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாமில் நடந்த மோதலில் ராணுவ வீரர்கள் 24 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாமில் நடந்த மோதலில் ராணுவ வீரர்கள் 24 பேர் பலி
x
தினத்தந்தி 20 March 2020 9:59 PM GMT (Updated: 20 March 2020 9:59 PM GMT)

ஆப்கானிஸ்தானில் ஜாபுல் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமில் நடந்த உள்மோதலில் ராணுவ வீரர்கள் 24 பேர் பலியாயினர்.


* ஆப்கானிஸ்தானில் ஜாபுல் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமில் நடந்த உள்மோதலில் ராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

* ர‌ஷியாவில் த‌ஷீர்கான் அதிநவீன ஏவுகணை சோதனை முதன்முதலாக இந்த ஆண்டு நடத்தப்படும் என்று அந்த நாட்டின் ராணுவ அமைச்சகம் கூறி உள்ளது.

* நெதர்லாந்து நாட்டில் கழிவறை காகிதத்துக்கு தட்டுப்பாடு இல்லை, இன்னும் 10 ஆண்டுகளுக்கு தேவையான கழிவறை காகிதம் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.

* நான் சீசர் அல்ல, ஒவ்வொரு நாளும் மக்களுக்காகவே பணியாற்றுகிறேன், மக்களின் விருப்பங்களை கேட்டு நிறைவேற்றுகிறேன் என்று ர‌ஷிய அதிபர் விளாடிமிர் புதின் மனம் திறந்து சொல்லி இருக்கிறார்.

* சிரியாவில் இத்லிப் மாகாணத்தில் நடந்த ராக்கெட் தாக்குதலில் சிக்கி 2 துருக்கி வீரர்கள் பலியானார்கள்.

* ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை, கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் ரத்து செய்யப்படாது என்று அமெரிக்கா உறுதிபட கூறி உள்ளது.

Next Story