ஜி-7 நாடுகள் மாநாட்டை காணொலி மூலம் நடத்த முடிவு


ஜி-7 நாடுகள் மாநாட்டை காணொலி மூலம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 20 March 2020 11:17 PM GMT (Updated: 20 March 2020 11:17 PM GMT)

ஜி-7 நாடுகள் மாநாட்டை காணொலி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கேம்ப் டேவிட் பகுதியில், ஜூன் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஜி-7 நாடுகள் உச்சி மாநாடு நடைபெற இருந்தது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய 7 நாடுகள், அதில் உறுப்பினர்களாக உள்ளன.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த மாநாட்டை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரத்து செய்துள்ளார். அதற்கு பதிலாக, ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் ஏப்ரல், மே மாதங்களில் காணொலி காட்சி மூலம் உரையாட அவர் முடிவு செய்துள்ளார்.

இத்தகவலை வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் ஜுட் டீரே தெரிவித்தார்.

Next Story