ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 10 நிமிடங்களுக்கு ஒருவர் பலி அதிர்ச்சி தகவல்


ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 10 நிமிடங்களுக்கு ஒருவர் பலி அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 21 March 2020 5:53 AM GMT (Updated: 21 March 2020 5:53 AM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10 நிமிடங்களுக்கு ஒருவர் ஈரானில் இறப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தெக்ரான்

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகின் 184 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 11,000 பேர் வரை இதுவரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 என அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 19,644 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அங்கு வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டன.பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. 

கொரோனா பாதிப்புக்கு ஈரான் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளது. இறப்பு விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஈரானின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜகான்பூர் கூறும்போது

ஈரானில் 10 நிமிடங்களுக்கு ஒருவர் இறப்பதாகாவும், ஒரு மணிநேரத்தில் 50 பேர் பாதிக்கப்படுவதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஈரானிய அதிகாரிகள் முன்பு தெரிவித்ததை விட கொரோனா வைரஸ் பரவலின் அளவு மிக அதிகம் என்பதை ஒப்புக் கொண்டது இதுவே முதல் முறை.

Next Story