கொரோனா பாதிப்பு : இந்தியாவைப் போல் பாகிஸ்தானில் ஊரடங்கை அறிவிக்க முடியாது- இம்ரான் கான்


கொரோனா பாதிப்பு : இந்தியாவைப் போல் பாகிஸ்தானில் ஊரடங்கை அறிவிக்க முடியாது- இம்ரான் கான்
x
தினத்தந்தி 24 March 2020 7:39 AM GMT (Updated: 24 March 2020 7:39 AM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போல் தன்னால் செயல்பட முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் மொத்தம் 887  பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.6 பேர் பலியாகி உள்ளனர்.  சிந்து மாகாணத்தில் மட்டும் 344 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.tதெற்கு ஆசியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான் தான்.

 இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது:-

நிலைமை இத்தாலியைப் போல மோசமாக இல்லை பாகிஸ்தானில் மீண்டும் ஊரடங்கு உத்தரவுக்கு சாத்தியமில்லை. இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போன்றோர் உடனடியாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தலாம். ஆனால் அதே சமயம் என்னால் முடியாது. அவ்வாறு அறிவித்தால் எங்கள் நாட்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடும். எங்களது நாட்டிலும் கொரோனாவின் மரணப்பிடியில் மக்கள் அல்லல்படுகிறார்கள்.

பாகிஸ்தான் உலகின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. பாகிஸ்தானில் 25 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வருவதால் பாகிஸ்தானில் முழு அடைப்பு சாத்தியமில்லை. நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் வறுமையில் வாடுகின்றனர். முழு அடைப்பால் உணவுப்பஞ்சம் ஏற்படும். மக்களின் துன்பத்தை குறைப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

கொரோனா வைரஸை விட அதனால் எற்படும் பீதிதான் பிரச்சினை மிகவும் ஆபத்தானது. அனைவரும் பீதி அடைந்தால் அது சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.

மேலும் சமூகத்தில் இருந்து விலகுதல், சுயமாக தனித்திருத்தல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்படுத்துதல் முறைகளை வரவேற்பதாகவும் இம்ரான்கான் கூறியுள்ளார்.

இருப்பினும், இம்ரான்கானின் ஆலோசனையை மீறி, சிந்துவில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைமையிலான மாகாண அரசு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 15 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ளது.

Next Story