இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 847 பேர் உயிரிழப்பு


இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 847 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 17 April 2020 5:12 PM GMT (Updated: 17 April 2020 5:12 PM GMT)

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 847 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லண்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி உள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 22 லட்சத்து 6 ஆயிரத்து 676 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 663 பேர் பலியாகி உள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்சை தொடர்ந்து தற்போது இங்கிலாந்தில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. 

இங்கிலாந்து நாட்டில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்று வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 847 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 14 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது. 


Next Story