கொரோனா தொற்று: சீனாவிடம் 162 பில்லியன் டாலர் இழப்பீடு கேட்கும் ஜெர்மன்


கொரோனா தொற்று: சீனாவிடம் 162 பில்லியன் டாலர் இழப்பீடு கேட்கும் ஜெர்மன்
x
தினத்தந்தி 21 April 2020 5:23 AM GMT (Updated: 21 April 2020 5:23 AM GMT)

கொரோனாவால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடு கோரி ஜெர்மன் 149 பில்லியன் யூரோக்கள் ( 162 பில்லியன் டாலர் )இழப்பீடு கேட்டு பட்டியல் அனுப்பியுள்ள விவகாரம் சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெர்லின்

உலகின் பொருளாதார நிலையையும் கடுமையாக பாதித்துவிட்ட கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் மீது உலக நாடுகள் பலவும் கடும் வெறுப்பில் உள்ளன. இந்நிலையில், ஜெர்மன் சீனாவுக்கு இழப்பீடு கேட்டு பட்டியல் ஒன்றை அனுப்பியுள்ளது. உங்களால் எங்களுக்கு 149 பில்லியன் யூரோக்கள்(162 பில்லியன் டாலர்) நஷ்டம் என்று இழப்பீடு கேட்டுள்ளது.

அந்த பட்டியலில் சுற்றுலா இழப்புக்காக 27 பில்லியன் யூரோக்களும், திரைப்படத்துறையில் ஏற்பட்ட இழப்புக்காக 7.2 பில்லியன் யூரோக்களும், விமான சேவையில் ஏற்பட்ட இழப்புக்காக ஒரு பில்லியன் யூரோக்களும், சிறு தொழில்களில் ஏற்பட்டுள்ள இழப்புக்காக 50 பில்லியன் யூரோக்களும், சீனா தங்களுக்கு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்துள்ள சீனா,  தங்கள் நாட்டின் மீதான வெறுப்பு காரணமாக ஜெர்மனி இவ்வாறு கூறியிருப்பதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு தொற்றுநோய்க்கு, ஒரு நாட்டைக் குறை கூறி இழப்பீடு கேட்பது மிகவும் மோசமான செயல்.இது அயல்நாட்டு வெறுப்பையும் தேசியவாதத்தையும் தூண்டும் செயல் என விமர்சித்துள்ளது.

Next Story