24 மணி நேரத்தில் 823 பேர் பலி - இங்கிலாந்து சுகாதாரத் துறை


24 மணி நேரத்தில் 823 பேர் பலி - இங்கிலாந்து சுகாதாரத் துறை
x
தினத்தந்தி 21 April 2020 5:28 PM GMT (Updated: 21 April 2020 5:28 PM GMT)

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் காரணமாக 24 மணி நேரத்தில் 823 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு  கொரோனாவால் தற்போது வரை 129044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 24 மணி நேரத்தில் 823 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கை 17337 ஆக அதிகரித்துள்ளது. 

Next Story