இந்திய ராணும் தான் முதலில் விதிகளை மீறி எல்லைதாண்டியது - சீனா குற்றச்சாட்டு


இந்திய ராணும் தான் முதலில் விதிகளை மீறி எல்லைதாண்டியது - சீனா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Jun 2020 7:07 AM GMT (Updated: 25 Jun 2020 7:07 AM GMT)

இந்திய ராணுவப் படையினர் தான் முதலில் விதிகளை மீறி எல்லைதாண்டி வந்தனர் என சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.

பீஜிங்

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ந் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேரும், சீன தரப்பில் 45 பேரும் உயிர் இழந்தனர்.

எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் சீன படையினர் அத்துமீறியதாக இந்தியாவும், இந்திய வீரர்கள் அத்துமீறியதாக சீனாவும் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றன.

இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. 

இதனிடையே கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ள காட்சிகள் செயற்கைக்கோள் மூலமாக படமாக்கப்பட்டு வெளியாகி உள்ளன.

சர்வதேச விதிகளை மீறி இந்திய ராணுவத்தினர் தான் முதலில் சீன வீரர்களை தாக்கியதாக அந்நாடு கோரியுள்ளது. மேலும் ஜூன் 15ம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் எல்லைத் தாண்டி வந்து சீனாவின் முகாமை அழித்ததாக குற்றம் சாட்டியுள்ளது. எல்லையில் பதற்றம் தணிய இந்தியா தான் ஒத்துழைக்க வேண்டும் என்று சீன அரசு குறிப்பிட்டுள்ளது. 

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஜியான் கூறியதாவது:- 

கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்கு இந்தியா தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று சீனா கோரியுள்ளது. இந்திய ராணுவப் படையினர் தான் முதலில் விதிகளை மீறி எல்லைதாண்டி வந்தனர். சீன ராணுவ படையினர் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நீண்ட நாட்களாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story