உலக செய்திகள்

10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை ஆனால் சிகை அலங்காரத்திற்கு மட்டும் டிரம்ப் செலவிட்ட தொகை..? + "||" + $70,000 on hairstyling – Donald Trump's taxes in numbers

10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை ஆனால் சிகை அலங்காரத்திற்கு மட்டும் டிரம்ப் செலவிட்ட தொகை..?

10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை ஆனால் சிகை அலங்காரத்திற்கு மட்டும் டிரம்ப் செலவிட்ட தொகை..?
10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை ஆனால் சிகை அலங்காரத்திற்கு மட்டும் ஓராண்டில் டிரம்ப் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்ற தகவல் அம்பலமான நிலையில் அவர் தமது சிகை அலங்காரத்திற்கு மட்டும் செலவிட்ட தொகை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோடீஸ்வரரான டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் முன்னர் தொடர்ந்து 15 ஆண்டுகளில் அரசுக்கு வரி ஏதும் செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியது.

இதில் 5 ஆண்டுகளில் அவர் மிகக் குறைவான வரியே செலுத்தியுள்ளார். அதாவது 2017 ஆம் ஆண்டு வருமான வரியாக வெறும் 750 டாலர் மட்டுமே செலுத்தியுள்ளார். இந்த நிலையில், தொலைக்காட்சிகளில் தோன்ற, தமது சிகை அலங்காரத்திற்காக மட்டும் ஓராண்டில் 55,000 பவுண்டுகள் ( 52 லட்சம் ) செலவிட்டதாக அரசுக்கு தரவுகளாக சமர்ப்பித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், ஜனாதிபதி டிரம்ப் தொடர்பான இந்த அதிர்ச்சி தகவல்கள் அவரது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்றே கருதப்படுகிறது.மேலும், வங்கிகளில் இருந்து கடன்பெற்றிருந்த தொகையில் சுமார் 421 மில்லியன் டாலர் தொகையை அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர் திருப்பி செலுத்தவேண்டி உள்ளது.

டிரம்பின் கடனில் பெரும்பாலானவை புளோரிடாவில் உள்ள அவரது கோல்ஃப் ரிசார்ட் (125 மில்லியன் டாலர்) மற்றும் வாஷிங்டனில் உள்ள அவரது ஓட்டல் (160 மில்லியன் டாலர்) ஆகியவற்றிலிருந்து வந்தவை என கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
2. அமெரிக்காவில் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானது- விமானிகள் இருவர் பலி
அமெரிக்காவில் கடற்படைக்கு சொந்தமான விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
3. சிறப்புத் தொழில்களுக்கு எச் -1 பி தற்காலிக வணிக விசாக்கள் வழங்க அமெரிக்கா தடை ; இந்தியர்கள் பாதிப்பு
சிறப்புத் தொழில்களுக்கு தற்காலிக வணிக விசாக்களை வழங்க வேண்டாம் என்று வெளியுறவுத்துறை முன்மொழிந்துள்ளது இது நூற்றுக்கணக்கான இந்தியர்களை பாதிக்கலாம் என கூறப்படுகிறது
4. மெலனியா டிரம்புக்கு ’தொடர் இருமல்’ பிரசாரத்தை ரத்து செய்தார்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் “தொடர் இருமல்” காரணமாக அதிபர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்.
5. சைபர் தாக்குதலில் ஈடுபட்டதாக 6 ரஷ்ய உளவு அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு பதிவு
சைபர் தாக்குதலில் ஈடுபட்டதாக 6 ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.