உலக செய்திகள்

இரண்டு பிரான்ஸ் போர் விமானங்களை விரட்டியடித்த ரஷியா + "||" + Russian Su-27 fighter intercepts US, German spy planes over Baltic Sea

இரண்டு பிரான்ஸ் போர் விமானங்களை விரட்டியடித்த ரஷியா

இரண்டு பிரான்ஸ் போர் விமானங்களை விரட்டியடித்த ரஷியா
எல்லையை நெருங்கிய இரண்டு பிரான்ஸ் போர் விமானங்களை ரஷியா விரட்டியடித்தது
மாஸ்கோ

தங்கள் நாட்டிற்குள் நுழைய முயன்ற இரண்டு பிரான்ஸ் போர் விமானங்களை விரட்டியடித்ததாக ரஷிய தேசிய பாதுகாப்பு நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 26 அன்று ரஷ்யாவின் மாநில எல்லையை நெருங்கும் இரண்டு விமான இலக்குகளை ரஷ்ய ரேடார்கள் கண்டறிந்தன.அந்த விமானங்களை தடுத்து நிறுத்துவதற்காக ரஷிய விமான பாதுகாப்பு படைகள் செவ்வாய்க்கிழமை கருங்கடலில் சூ-27 போர் விமானத்தை ஏவின.

அந்த இரண்டு விமானங்களும் பிரான்ஸ் விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 போர் குண்டுவீச்சு விமானம் என ரஷிய போர் விமானக் குழுவினர் அடையாளம் கண்டனர். பின் ரஷிய விமானம், இரண்டு பிரான்ஸ் விமானங்களுடன் கருங்கடலை கடந்து சென்றது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ரஷிய போர் விமானம் சர்வதேச விதிகளை கடுமையாக பின்பற்றி நடந்தது என்று ரஷிய தேசிய பாதுகாப்பு நிர்வாக மையம் கூறியுள்ளது.பிரான்ஸ் இராணுவ விமானம் ரஷிய எல்லையிலிருந்து விலகிச் சென்றதையடுத்து, சூ-27 தெற்கு இராணுவ விமானநிலையத்திற்கு திரும்பியது என ரஷிய தேசிய பாதுகாப்பு நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
அத்துமீறி தங்களது கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை ரஷிய போர்க்கப்பல் துரத்திச் சென்ற விரட்டித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. ரஷியாவில் வேகமெடுக்கும் கொரோனா; ஒரே நாளில் 20,977 பேருக்கு தொற்று உறுதி
ரஷியாவில் ஒரே நாளில் 20 ஆயிரத்து 977 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. ரஷியாவில் அதிகரிக்கும் கொரோனா; ஒரே நாளில் 20,498 பேருக்கு தொற்று
ரஷியாவில் ஒரே நாளில் 20,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பார்கின்சன் நோயால் பாதிக்கபட்டு உள்ள ரஷிய அதிபர் வரும் ஜனவரி மாதம் பதவி விலகுவார்?
பார்கின்சன் நோயால் பாதிக்கபட்டு உள்ள ரஷிய அதிபர் வரும்ஜனவரி மாதம் பதவி விலகுவார் என டெய்லி மெயில், நியூயார்க் போஸ்ட் செய்திகள் கூறுகின்றன.
5. அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தெளிவு இல்லாதது உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் - ரஷியா
அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தெளிவு இல்லாதது உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் என ரஷியா கூறி உள்ளது.