உலக செய்திகள்

பிரேசில் நாட்டில் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்துக் கொலை + "||" + Black man beaten to death by supermarket guards in Brazil

பிரேசில் நாட்டில் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்துக் கொலை

பிரேசில் நாட்டில் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்துக் கொலை
பிரேசில் நாட்டில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பல்பொருள் அங்காடியில் வன்முறை வெடித்தது.
பிரேசிலியா,

தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(வயது 40) என்ற நபர் அங்குள்ள பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இது குறித்து வீடியோ காட்சிகள் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட பல்பொருள் அங்காடி போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. தற்போது, பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழத் தொடங்கியுள்ளன. பிரேசில் நாட்டில் ஏற்கனவே  கருப்பின மக்களுக்கான உரிமை குறித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே மேலும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த பல்பொருள் அங்காடியின் முன்பு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு அந்த நிறுவனம் சார்பில் வருத்தம் தெரிவித்ததோடு, இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனா கொரோனா தடுப்பூசி சோதனை: கடுமையான பக்க விளைவு சோதனை நிறுத்தம்
பிரேசிலில் நடைபெற்று வந்த சீனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்றவர்களுக்கு கடுமையான பக்க விளைவு ஏற்பட்ட காரணத்தினால் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
2. பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து: இரண்டு நோயாளிகள் உயிரிழப்பு
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
3. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 28,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 28,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 998 ஆக அதிகரிப்பு
பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளது.
5. பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,50,555 ஆக அதிகரிப்பு
பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 1,50,555 ஆக அதிகரித்துள்ளது.