கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆராய எல்லாவற்றையும் செய்வோம்: உலக சுகாதார அமைப்பின் தலைவர்


கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆராய எல்லாவற்றையும் செய்வோம்: உலக சுகாதார அமைப்பின் தலைவர்
x
தினத்தந்தி 30 Nov 2020 6:09 PM GMT (Updated: 30 Nov 2020 6:09 PM GMT)

கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆராய எல்லாவற்றையும் செய்வோம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா,

நாங்கள் கொரோனா வைரசின் தோற்றத்தை அறிய விரும்புகிறோம், வைரஸ் தோற்றத்தை அறிய எல்லாவற்றையும் செய்வோம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செய்தியாளர்களிடம் கூறினார், 

மேலும் விசாரணையின் கட்டுப்பாட்டை சீனாவிடம் ஒப்படைத்ததாக குற்றம் சாட்டிய விமர்சகர்களிடம், இந்த பிரச்சினையை அரசியலாக்குவதை நிறுத்துமாறு வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கொரோனா வைரசின் தோற்றம் எங்களுக்குத் தெரியும் என்பதை உறுதிப்படுத்த எல்லாவற்றையும் செய்கிறோம். சிலர் இதை அரசியலாக்கி வருகின்றனர். எங்கள் நிலை மிகவும் தெளிவாக உள்ளது, நாங்கள் வுஹானிடமிருந்து ஆய்வைத் தொடங்குவோம், அங்கு என்ன நடந்தது என்பதை அறிவோம். கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், வேறு வழிகள் இருக்கிறதா என்று ஆராய்வோம். இந்த வைரசின் தோற்றத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும், ஏனெனில் இது எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்க உதவும்” என்று அவர் தெரிவித்தார்.

Next Story