உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.83 கோடியாக உயர்வு


உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.83 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 23 Dec 2020 1:23 AM GMT (Updated: 23 Dec 2020 1:23 AM GMT)

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.50 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. 

இந்தசூழலில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் ஏற்கனவே பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகமாக பரவி வருவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 7,83,05,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,50,75,748 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 22 ஆயிரத்து 311 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,15,07,869 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,045 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா      -  பாதிப்பு- 1,86,45,058, உயிரிழப்பு -  3,30,306, குணமடைந்தோர் -1,09,09,947
இந்தியா       -    பாதிப்பு- 1,00,99,303, உயிரிழப்பு -  1,46,476, குணமடைந்தோர் - 96,62,697
பிரேசில்       -    பாதிப்பு - 73,20,020, உயிரிழப்பு -  1,88,285, குணமடைந்தோர் - 63,54,972
ரஷியா        -    பாதிப்பு - 29,06,503, உயிரிழப்பு -   51,912, குணமடைந்தோர்  - 23,19,520
பிரான்ஸ்     -     பாதிப்பு - 24,90,946, உயிரிழப்பு -   61,702, குணமடைந்தோர்  -  1,86,058

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

இங்கிலாந்து - 21,10,314
துருக்கி - 20,62,960
இத்தாலி - 19,77,370
ஸ்பெயின் -18,38,654
ஜெர்மனி - 15,56,611
அர்ஜென்டினா - 15,55,279
கொலம்பியா - 15,30,593
மெக்சிகோ - 13,25,915
போலந்து - 12,14,525
ஈரான்- 11,70,743
பெரு - 10,00,153
உக்ரைன் - 9,79,506
தென்னாப்பிரிக்கா - 9,40,212

Next Story