சீனாவின் கொரோனா தடுப்பூசியை வாங்கும் துருக்கி; 91.25 சதவீதம் பலனளிக்கக்கூடியதாக உள்ளது


படம்: Ng Han Guan/AP
x
படம்: Ng Han Guan/AP
தினத்தந்தி 25 Dec 2020 1:26 PM GMT (Updated: 25 Dec 2020 1:26 PM GMT)

சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசி, முதல் கட்டமாக நல்ல விளைவை தந்துள்ளதால், மேலும் 30 லட்சம் டோஸ்களை ஓரிரு நாட்களில் வரவழைத்து துருக்கி அரசு பயன்படுத்த உள்ளது.

இஸ்தான்புல்

8.3 கோடி  மக்கள் தொகையை கொண்ட மத்திய கிழக்கு நாடான துருக்கியில், அதிகாரப்பூர்வமாக இதுவரை 19,115 கொரோனா  இறப்புகள் மற்றும் 22  லட்சம்  கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.இந்நிலையில், சீனாவின் சினோவேக்  தடுப்பூசியை இன்னும் சில நாட்களில் இறக்குமதி செய்யவுள்ளதாக துருக்கி நாட்டு சுகாதார அமைச்சர் பஹ்ரெட்டின் கோகா அறிவித்துள்ளார்.

துருக்கியில் 7,371 தன்னார்வலர்களின் மீது இந்த சினோவ்வாக் தடுப்பூசியை பரிசோத்திதத்த போது, 91.25 சதவீதம் பலனளிக்கக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் 3ஆம் கட்ட சோதனைகள் இன்னும் நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கி முதற்கட்டமாக 30 லட்சம்  சினோவாக் டோஸ்களை வரும் ஞாயிற்றுக்கிழமை பெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மேலும் 5 கோடிக்கும்  அதிகமான தடுப்பூசிகளை அடுத்த மாதம் பெறுகிறது.

மேலும், அடுத்த சில நாட்களில் ஃபைசர் / பயோஎன்டெக் நிறுவனத்துடன் 45 லட்சம்  டோஸுக்கு ஒரு ஒப்பந்தத்தில் துருக்கி கையெழுத்திடவுள்ளது. மேலும் இந்த ஃபைசர் / பயோஎன்டெக் நிறுவனத்திடமிருந்து 3 கோடி  தடுப்பூசிகளை கூடுதலாக வாங்குவதற்கான விருப்பத்துடன் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக இறக்குமதியாகும் டோஸ்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களிடமிருந்து தொடங்குகிறது.மருந்துகள் கிடைத்ததும், துருக்கி ஒரே நாளில் 15 முதல் 2 0 லட்சம் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார்.சுமார் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் வகையில், நாள்தோறும் ஒன்றரை லட்சம் அல்லது இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும் என   கூறியுள்ளார்.

Next Story