டிரம்ப்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப் போவதில்லை ஈரான் அதிபர் ரூஹானி எச்சரிக்கை


டிரம்ப்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப் போவதில்லை ஈரான் அதிபர் ரூஹானி  எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Dec 2020 4:11 PM GMT (Updated: 25 Dec 2020 4:11 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டிரம்ப்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப் போவதில்லை என்று ஈரான் அதிபர் ரூஹானி வெளிப்படையாக பேசியுள்ளார்.

தெஹ்ரான்:

ஈரான் நாட்டின்  ராணுவத் தளபதி சுலைமானி, அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரின் மரணம் ஒட்டு மொத்த ஈரான் மக்களையும் கண்ணீர் சிந்த வைத்தது. அதுமட்டுமின்றி சுலைமானின் மரணத்திற்கு காரணமான, அமெரிக்காவையும், அதிபர் டிரம்ப்பையும் சாதரணமாக விடப்போவதில்லை என்று ஈரான் அப்போதே எச்சரித்தது.

இந்நிலையில், நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இதனால் அவர் வரும் ஜனவரி மாதம் 20-ஆம் திகதி தன்னுடைய பதவியை இழக்கிறார். 

இந்த நிலையில் செய்தியாளர்களை  சந்தித்த ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறும் போது

ஈரான் தனது வரலாற்றில் இரண்டு மனநலம் பாதித்தவர்களை சமாளிக்க வேண்டி இருந்தது. ஒருவர் சதாம் உசேன். மற்றொருவர் டொனால்ட் டிரம்ப். ஒருவர் இராணுவப் போரிலும், மற்றொருவர் பொருளாதாரப் போரிலும் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப்போவதில்லை என கூறினார்.

இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான பிரசாரத்திற்கு தலைமை தாங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியில் இருந்து விலகியது குறித்து ஈரான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக டிசம்பர் மாதத் தொடக்கத்தில் ஹசன் ரூஹானி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story