உலக செய்திகள்

இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு - போரிஸ் ஜான்சன் அறிவிப்பு + "||" + Curfew in the UK extended until July 17 - Boris Johnson announces

இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு - போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு - போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
இங்கிலாந்து வரும் ஜூலை 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
லண்டன்,

கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. ஆனால், பொது ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாட்டால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தது. மேலும் உலகிலேயே முதன் முறையாக கொரோனா தடுப்பூசியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியது.

இதற்கிடையில் இங்கிலாந்தில் உருமாமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவியது. இதனால் இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு நாடுகள் இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்தன.

இந்த நிலையில் இங்கிலாந்தில் வரும் ஜூலை 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகமாகும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ள போரிஸ் ஜான்சன், தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும்வரை வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,573 பேருக்கு கொரோனா பாதிப்பு
இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,05,138 ஆக உயர்ந்துள்ளது.
2. இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருந்தக உரிமையாளருக்கு 12 மாதம் சிறை
இங்கிலாந்தில் கள்ளச்சந்தையில் மருந்து விற்றது தொடர்பாக இந்திய வம்சாவளி மருந்தக உரிமையாளருக்கு 12 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் இதுவரை 1.76 கோடி பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது
இங்கிலாந்தில் நாடு முழுவதும் இதுவரை 1.76 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,364 பேருக்கு கொரோனா
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் புதிதாக 12,364 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,052 பேர் பலி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.