உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7.17 கோடியாக உயர்ந்துள்ளது
ஜெனீவா,
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 கோடியை நெருங்கி வருகிறது.
இதன்படி உலகம் முழுவதும் தற்போது 9,97,68,213 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,17,43,046 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21 லட்சத்து 38 ஆயிரத்து 942 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 2,58,86,225 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,10,362 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு- 2,57,02,125, உயிரிழப்பு - 4,29,490, குணமடைந்தோர் -1,54,09,639
இந்தியா - பாதிப்பு- 1,06,68,356, உயிரிழப்பு - 1,53,503, குணமடைந்தோர் -1,03,28,738
பிரேசில் - பாதிப்பு - 88,44,600, உயிரிழப்பு - 2,17,081, குணமடைந்தோர் - 76,53,770
ரஷ்யா - பாதிப்பு - 37,19,400, உயிரிழப்பு - 69,462, குணமடைந்தோர் - 31,31,760
இங்கிலாந்து - பாதிப்பு - 36,47,463, உயிரிழப்பு - 97,939, குணமடைந்தோர் - 16,31,400