உம் அல் குவைன்,
உம் அல் குவைனில், பலஜ் அல் முல்லா பகுதியின் முக்கிய சாலையில் ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் டிரைவர் ஒருவர் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த நபர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். இதற்கிடையே காரை ஓட்டிவந்த டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றார்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்த நபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற டிரைவரை அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தனர். இதில், அவர் உம் அல் குவைன் அருகே நிற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விபத்து நடந்த 3 மணி நேரத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.