மெக்சிகோவில் தொடரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்; கண்டனம் தெரிவித்து பெண்கள் பேரணி


மெக்சிகோவில் தொடரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்; கண்டனம் தெரிவித்து பெண்கள் பேரணி
x
தினத்தந்தி 30 May 2021 5:17 AM GMT (Updated: 30 May 2021 5:17 AM GMT)

மெக்சிகோவில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் பேரணி நடத்தினர்.

மெக்சிகோ,

மெக்சிகோவில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்து நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்றிணைந்து பேரணி நடத்தினர். பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு நீதி கேட்டு, கோஷங்கள் எழுப்பியபடி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். 

மெக்சிகோவில் 50 லட்சம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளதாகவும், இன்னும் ஏராளமானோர் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்து, பேரணி நடத்தினர். மேலும், அங்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10 பெண்களாவது கொலை செய்யப்படுவதாக அதிகாரப் பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story