பாலஸ்தீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் மர்ம மரணம்


Image courtesy : AFP
x
Image courtesy : AFP
தினத்தந்தி 28 Jun 2021 8:21 PM GMT (Updated: 28 Jun 2021 10:02 PM GMT)

பாலஸ்தீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

ரமெல்லா,

காசா முனை மற்றும் மேற்குகரை என பாலஸ்தீனம் இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதேபோல், மேற்குகரை பகுதியை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலஸ்தீன அதிகாரம் ஆட்சி செய்து வருகிறது. மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில், முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன ஆட்சி, அதிகாரம் மீது மேற்குகரையின் ஹிப்ரோன் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நிசர் பெனெட் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். 43 வயதான நிசர் பென்னெட் பாலஸ்தீன அதிகாரம் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

மேற்குகரை பகுதியின் அதிபராக செயல்பட்டு வரும் முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அதிகாரம் மீதான ஊழல் குற்றச்ச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு ஆதாரங்களையும், வீடியோக்களையும் நிசர் பெனெட் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், மேற்குகரையில் பாலஸ்தீன அதிகாரத்தின் பாதுகாப்பு படையினரால் நிசர் பெனெட் அவரது வீட்டில் வைத்து கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நிசர் பெனெட் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

நிசர் பெனெட் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்துவிட்டதாக பாலஸ்தீன அதிகாரத்தின் பாதுகாப்பு படையினர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், நிசர் பெனெட்டின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அதிபர் முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அதிகாரத்தின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்குகரை பகுதியில் கடந்த 4 நாட்களாக பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story