இங்கிலாந்தில் ஜூலை 19-ந் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படும் - போரிஸ் ஜான்சன் நம்பிக்கை


இங்கிலாந்தில் ஜூலை 19-ந் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படும் - போரிஸ் ஜான்சன் நம்பிக்கை
x
தினத்தந்தி 29 Jun 2021 6:34 AM GMT (Updated: 29 Jun 2021 6:34 AM GMT)

இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 19-ந் தேதியுடன் முழுமையாக நீக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

லண்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில், கடுமையான ஊரடங்கு காரணமாக நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இருப்பினும் இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனாவின் 2-வது அலையால் அங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

மேலும் பி.1.617.2 என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று அங்கு பரவி வருவது கண்டறியப்பட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்கு இங்கிலாந்து அரசு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கை அமல்படுத்தியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் சரியாக மேற்கொண்டால், இங்கிலாந்தில் ஜூன் 21 ஆம் தேதியோடு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வரும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார்.

ஆனால் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் அந்த முடிவை இங்கிலாந்து அரசு ஒத்திவைத்த‌து. இந்நிலையில் இங்கிலாந்தில் தற்போது கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதால், வரும் ஜூலை 19-ஆம் தேதியுடன் அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கி கொள்ளப்படும் என்றும் அதன் பிறகு அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்று நம்புவதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.

Next Story