உலக செய்திகள்

இந்தோனேசியாவில் புதிதாக 28,228 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,487 பேர் பலி + "||" + Indonesia reports 28,228 newly-confirmed COVID-19 cases, 1,487 new deaths

இந்தோனேசியாவில் புதிதாக 28,228 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,487 பேர் பலி

இந்தோனேசியாவில் புதிதாக 28,228 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,487 பேர் பலி
இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜகார்தா, 

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.50 கோடியை தாண்டி உள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 லட்சத்து 79 ஆயிரத்து 615 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டு வந்தது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இந்தோனேசியா 14வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியாவில் புதிதாக 28,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தோனேசியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 31,94,733 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 1,487 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 84 ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 40,374 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 25,49,692 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,60,275 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியா, பிலிப்பைஸ் நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. இந்தோனேசியாவின் தலைநகர் மாற்றம்: பின்னணி என்ன?
தலைநகரை மாற்றுவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் 2022-2024-க்கு இடையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3. இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.
4. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,867 பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தோனேசியா: மீண்டும் வெடித்து சாம்பலை வெளியிடும் செமேரு எரிமலை
இந்தோனேசியாவில் உள்ள செமேரு எரிமலை மீண்டும் சாம்பலை வெளியிடுகிறது.