உலக செய்திகள்

பிரான்சில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரெயில் ஏறியதில் 3 பேர் உயிரிழப்பு + "||" + Three Algerian refugees killed by train in France

பிரான்சில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரெயில் ஏறியதில் 3 பேர் உயிரிழப்பு

பிரான்சில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரெயில் ஏறியதில் 3 பேர் உயிரிழப்பு
பிரான்சில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரெயில் ஏறியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பியாரிட்ஸ். இந்த நகரம் பிரான்சுக்கு வரும் அகதிகளுக்கான பிரதான போக்குவரத்து பாதையாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள் இந்த நகரில் இருந்துதான் பிரான்சின் பிற இடங்களுக்கு செல்கின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர் அங்குள்ள ரெயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 6 மணிக்கு இந்த தண்டவாளத்தில் ரெயில் வந்தது. அப்போது தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகளை ரெயில் டிரைவர் கவனிக்காததால் அவர்கள் மீது ரெயில் ஏறியது.

இந்த கோர சம்பவத்தில் அகதிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒரு அகதிக்கு கால் உடைந்தது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆயுத பூஜை- தீபாவளி பண்டிகை: தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்
ஆயுத பூஜை- தீபாவளி பண்டிகை: தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
2. பிரான்சில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 2 பேர் பலி
பிரான்சில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
3. பிரான்சில் 70 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!
பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.
5. பிரான்சில் புதிதாக 7,414 பேருக்கு கொரோனா பாதிப்பு
பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,414 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.