ஆப்கானிஸ்தான் விவகாரம் ரஷியா தலைமையில் இன்று பேச்சுவார்த்தை


ஆப்கானிஸ்தான் விவகாரம் ரஷியா தலைமையில் இன்று பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 19 Oct 2021 10:00 PM GMT (Updated: 19 Oct 2021 10:00 PM GMT)

ஆப்கானிஸ்தான் விவகாரம் ரஷியா தலைமையில் இன்று பேச்சுவார்த்தை அமெரிக்கா பங்கேற்கவில்லை.

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறதும் தலீபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டை தங்களின் பிடிக்குள் கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் தலைமையில் புதிய இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. அதே சமயம் ரஷியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலீபான்களின் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலை, ஆட்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க ரஷியாவின் தலைமையில் இன்று (புதன்கிழமை) சர்வதேச கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன. தலீபான் பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ரஷியா நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், ‘‘ரஷியா நடத்தும் பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். எனினும் இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும், முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்’’ என கூறினார்.

Next Story