உலக செய்திகள்

ஒமிக்ரான் கொரோனா வைரசின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கக்கூடும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை + "||" + Omicron Poses "Very High" Risk, WHO Urges Countries To Prep: 10 Points

ஒமிக்ரான் கொரோனா வைரசின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கக்கூடும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஒமிக்ரான் கொரோனா வைரசின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கக்கூடும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஒமிக்ரான் வகை கொரொனா எந்த அளவு கொடியது மற்றும் அபாயகரமானது என்பதை இன்னும் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவா,

கொரொனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மெல்ல மெல்ல மீண்டும் வந்த நிலையில், ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மீண்டும் உலக நாடுகளை கதி கலங்கை வைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட இந்த கொரோனா, டெல்டா வகை கொரோனாவை விட வீரியம் மிக்கதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

 ஐரோப்பிய நாடுகளிலும் இந்த ஒமிக்ரான் கொரோனா வேகமாக கால் பதித்து வருகிறது. ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஒமிக்ரான் கொரோனா வைரசின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பதாவது:- ஒமிக்ரா வேரியண்ட் , மிக அதிகமான உலகளாவிய அபாயமாக தோன்றுகிறது. பாதிப்பு அதிகமாகும் இடங்களில் மிக அதிமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எனினும், இந்த வகை கொரொனா எந்த அளவு கொடியது மற்றும் அபாயகரமானது என்பதை இன்னும் கண்டறியப்படவில்லை. ஒமிக்ரான் கொரோனா சர்வதேச அளவில்  பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த தயாராக வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஒமைக்ரான் பரவல் அச்சம்: 9 நாடுகளின் பயணிகளுக்கு நேபாள அரசு தடை
ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
2. ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் திறம்பட செயல்படாது - மாடர்னா தடுப்பூசி நிறுவனம்!
ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசிகளை கண்டறிந்து தயாரிப்பதற்கு அதிக மாதங்கள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளது.
3. ‘ஒமிக்ரான்’ வைரஸ்: ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது - வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
4. ஒமிக்ரான் மிதமான பாதிப்புகளையே ஏற்படுத்துகின்றன : தென் ஆப்பிரிக்க மருத்துவர் தகவல்
ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது.
5. ஓமிக்ரான் பாதிப்பின் அறிகுறிகள்: சோர்வு, லேசான காய்ச்சல் -தொண்டை அரிப்பு
இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக அறியப்படுகிறது.