சீனாவின் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 230 பில்லியன் டாலர் ஒதுக்கீடு


சீனாவின் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 230 பில்லியன் டாலர் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 5 March 2022 3:43 PM IST (Updated: 5 March 2022 3:43 PM IST)
t-max-icont-min-icon

சீன ராணுவத்திற்கு கடந்த ஆண்டை விட 7.1 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்,

உலகிலேயே ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான சீன அரசின் வரவு, செலவு திட்டங்கள் குறித்த அறிக்கை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இதில் சீன ராணுவத்திற்கு கடந்த ஆண்டை விட 7.1 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீனா தனது ராணுவத்திற்கு கடந்த ஆண்டு 209 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 230 பில்லியன் டாலர்களை(இந்திய மதிப்பில் சுமார் 20 ஆயிரத்து 300 கோடி ரூபாய்) ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

1 More update

Next Story