'தவறவிட்டு விட்டோமோ என்ற பயம்’; இந்தியா - டென்மார்க் பிரதமர்கள் சுவாரசிய கருத்து


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 3 May 2022 3:21 PM GMT (Updated: 3 May 2022 3:21 PM GMT)

இந்திய பிரதமர் மோடி டென்மார்க் பிரதமர் மிட்டீ ஃபெர்டிக்சென் செய்தியாளர்களை சந்தித்தனர்.

கொபென்ஹஜென்,

இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல்நாளான நேற்று ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி 2-வது நாள் பயணமாக இன்று டென்மார்க் சென்றுள்ளார்.

அவரை டென்மார்க் பிரதமர் மிட்டீ ஃபெர்டிக்சென் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். இதனை தொடர்ந்து இரு தலைவர்களும் பிரதமர் அலுவலகம் சென்றனர். அங்கு இந்திய பிரதமர் மோடியும் டென்மார்க் பிரதமர் மிட்டீ ஃபெர்டிக்செனும் உக்ரைன் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.  

இந்நிலையில், இந்த ஆலோசனைக்கு பின் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய இந்திய பிரதமர் மோடி, தற்போதைய நாட்களில் ஃப்ஒமோ (FOMO - Fear of Missing Out) அல்லது ‘தவறவிட்டு விட்டோமோ என்ற பயம்’ வாக்கியம் சமூகவலைதளத்தில் பிரபலமாகுகிறது. இந்தியாவின் சீரமைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பார்க்கும்போது, எங்கள் நாட்டில் முதலீடு செய்யாதவர்கள் அந்த வாய்ப்பை இழக்க நேரிடும் என்றார். 

இதனை தொடர்ந்து பேசிய டென்மார்க் பிரதமர் மிட்டீ ஃபெர்டிக்சென், ஃப்ஒமோ (FOMO - Fear of Missing Out) அல்லது ‘தவறவிட்டு விட்டோமோ என்ற பயம்’ வாக்கியத்தை நான் வெள்ளிக்கிழமை இரவுகள் மற்றும் பார்ட்டிகளில் தான் பயன்படுத்துவார்கள் என நான் கருதினேன். ஆனால், இந்த வாக்கியம் இந்தியா குறித்தது என எனக்கு இப்போது தான் தெரியவந்துள்ளது’ என்றார். 

Next Story