தென் கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரமாக குறைவு


தென் கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரமாக குறைவு
x
தினத்தந்தி 10 May 2022 11:50 PM GMT (Updated: 2022-05-11T05:20:15+05:30)

தென் கொரியாவி நேற்று முன்தினம் 49 ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா தொற்று பாதித்தது.

சியோல்,

தென் கொரியாவில் ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்ட கொரோனா அலை ஆதிக்கம் செலுத்தி வந்தது. தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலை மாறி வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 49 ஆயிரத்து 933 பேருக்கு தொற்று பாதித்தது. 

இதனால் மொத்த பாதிப்பு 1 கோடியே 76 லட்சத்து 14 ஆயிரத்து 895 ஆக அதிகரித்தது. தொற்று பாதிப்பில் இருந்து மீள முடியாமல் நேற்று முன்தினம் 23 பேர் பலியாகினர். தென் கொரியாவில் இதுவரை கொரோனா தொற்றால் 23 ஆயிரத்து 462 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story