பின்லாந்துக்கு மின்சார சப்ளையை நிறுத்திய ரஷியா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 May 2022 5:23 AM GMT (Updated: 2022-05-15T10:53:29+05:30)

பின்லாந்து நாட்டுக்கான மின்சார சப்ளையை ரஷியா நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

மாஸ்கோ,

பின்லாந்து நாட்டுக்கான மின்சார சப்ளையை ரஷியா நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பின்லாந்தும், ரஷ்யாவும் ஆயிரத்து 300 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. 

இந்நிலையில், நோட்டோ அமைப்பில் சேர பின்லாந்து முடிவு செய்து அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், பின்லாந்துக்கு மின்சார சப்ளையை நிறுத்த ரஷியா முடிவெடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் கட்டனங்களை செலுத்த முடியாது என பின்லாந்து அறிவித்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், ரஷியாவிடம் இருந்து 10 விழுக்காடு மட்டுமே மின்சாரம் வாங்குவதால் எந்த பாதிப்பும் இல்லை என பின்லாந்து தெரிவித்துள்ளது.


Next Story