ஈக்வடாரில் பயங்கர நிலநடுக்கம் - 4 பேர் பலி


ஈக்வடாரில் பயங்கர நிலநடுக்கம் - 4 பேர் பலி
x

ஈக்வடாரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.

குயிடோ,

தென் அமெரிக்க நாடுகளில் ஈக்வடாரும் ஒன்று. அந்நாட்டின் கடற்கரை மாகாணமான கயாஸ் மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்த மாகாணத்தின் பலஒ நகரில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்தன.

இந்த நிலநடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.


Next Story