பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் நிதியுதவி, கச்சா எண்ணெய் உதவி வழங்கும் சவுதி அரேபியா


பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் நிதியுதவி, கச்சா எண்ணெய் உதவி வழங்கும் சவுதி அரேபியா
x

Image Courtesy: AFP

பாகிஸ்தானுக்கு நிதி மற்றும் கச்சா எண்ணெய் உதவியை சவுதி அரேபியா வழங்கியுள்ளது.

லாகூர்,

இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் பாகிஸ்தானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளும் உதவி வருகின்றன. குறிப்பாக, சவுதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவி வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு மேலும் நிதி மற்றும் கச்சா எண்ணெய் உதவியை சவுதி அரேபியா வழங்கியுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு மேலும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாகவும், 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான கச்சா எண்ணெய் உதவியை சவுதி அரேபியா வழங்கியுள்ளது.


Next Story