வான்வெளி தாக்குதல் எதிரொலி; இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்


வான்வெளி தாக்குதல் எதிரொலி; இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்
x

Image Courtesy: AFP

காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேற்குகரை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.

இதற்கிடையே, காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த வான்வெளி தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக காசா முனையில் இருந்து ஹமாஸ் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. தெற்கு இஸ்ரேல் பகுதியை குறிவைத்து இந்த ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஹமாஸ் அமைப்பால் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேல் ஏவுகணை தடுப்பு அமைப்பால் நடுவானில் தடுத்து அழிக்கப்பட்டது. அதேவேளை, நள்ளிரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது.


Next Story