ஆன்மிகத் துளிகள்

ஆன்மிகத் துளிகள்
x
தினத்தந்தி 20 Dec 2016 12:30 AM GMT (Updated: 19 Dec 2016 10:21 AM GMT)

இறைவனின் கருணை, சிறு குழந்தையிடம் இருக்கும் மிட்டாயைப் போன்றது. மிட்டாயை தன்னிடம் தரும் படி குழந்தையைக் கெஞ்சும் பலரையும் நிராகரித்து விட்டு, தன்னிடம் இருக்கும் மிட்டாயை கேட்காத, விரும்பாத ஒருவரிடம் குழந்தை அதை ஒப்படைத்து விடும். இறைவனின் அனுக்கிரகமும் அப்படிப்பட்டதுதான்.

கருணை

–சாரதாதேவி

உடல்

பிறந்தவுடனேயே உடல் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. நாம் அதை ஒப்புக்கொள்ளவும் வேண்டாம்; மறுக்கவும் வேண்டாம். சுதந்திரம் என்பது இந்த உடலோடு நம்மைச் சம்பந்தப்படுத்திக்கொள்ளாது இருத்தலும், செயல்கள் தரும் இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாது இருத்தலுமே ஆகும்.

–ரமணர்.

அன்பு

நமது பிரார்த்தனையில் இறைவனை நம் அனைவருக்கும் தந்தையாக ஒப்புக்கொண்டு வழிபடுவதோடு நிறுத்திக்கொள்கிறோம். ஆனால் அவனது படைப்பில் வந்த ஒவ்வொரு மனிதனையும், நமது தினசரி வாழ்க்கையில் சகோதரனாக பாவித்து நடத்தாமல் போய்விடுகிறோம். இப்படிச் செய்தால் இறையருள் எப்படி கிடைக்கும்?

–விவேகானந்தர்.

ஆவுடையாருக்கு அபிஷேகம்

வடதிருமுல்லைவாயில் திருத்தலத்தில் மாசிலாமணி ஈஸ்வரன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவருக்கு, சிவலிங்கத் திருமேனியின் உச்சியில் சாத்தப்படும் சந்தனகாப்பு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மாற்றப்படும். எனவே இந்த லிங்கத்தில் உள்ள ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் கிடையாது. வருடம் ஒருமுறை சந்தனகாப்பு பிரிக்கப்பட்டு, சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

Next Story