தெப்பக்குளத்தில் கிடைத்த விநாயகர்


தெப்பக்குளத்தில் கிடைத்த விநாயகர்
x
தினத்தந்தி 21 Feb 2017 8:12 AM GMT (Updated: 21 Feb 2017 8:12 AM GMT)

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னிதிக்கு செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி ஒரு விநாயகர் வீற்றிருப்பார்.

துரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னிதிக்கு செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி ஒரு விநாயகர் வீற்றிருப்பார். இவரை ‘முக்குறுணி விநாயகர்’ என்று அழைக்கிறார்கள். ஒரு முறை திருமலை நாயக்க மன்னருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. வலியை போக்கினால், மீனாட்சி அம்மனுக்கு தெப்பக் குளம் கட்டுவதாக மன்னன் வேண்டிக்கொண்டான். இதையடுத்து வயிற்றுவலி குணமானது. தான் வேண்டிக்கொண்ட படி தெப்பக்குளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டான் மன்னன். தெப்பக்குளம் தோண்டும் போது பிரமாண்டமான பிள்ளையார் ஒன்று கிடத்தது. இவரே முக்குறுணி விநாயகர். விநாயகர் சதுர்த்தி நாளில், இந்த விநாயகருக்கு 18 படி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து படைப்பது வழக்கமாக உள்ளது.

Next Story